தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

P20144 : சமய மொழிபெயர்ப்புகள்

  • பாடம் 4

    P20144 சமய மொழிபெயர்ப்புகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    E

     

    இந்தப் பாடம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள சமய இலக்கியம் பற்றி விளக்குகிறது. சங்க காலம் முதலாகத் தற்காலம் வரை தமிழாக்கப்பட்டுள்ள சமய இலக்கியம், சமய மெய்யியல் குறித்து அறிமுக நிலையில் விவரிக்கிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

    • தமிழின் வளர்ச்சியில் சமய மொழிபெயர்ப்புகளின் இடத்தினை அறிந்து கொள்ளவியலும்.

    • தமிழரின் சமயக் கருத்தியல் என்பது பிறமொழிகளில் எழுதப்பட்ட நூல்களிலிருந்து பெரிதும் பெறப்பட்டுள்ளது என்பதனை அறியலாம்.

    • சங்க இலக்கியத்திலே பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் போன்ற மொழிகளிலுள்ள இலக்கியப் படைப்புகளின் தாக்கம் இருப்பதனை அறிய இயலும்.

    • கிறிஸ்தவச் சமயக் கருத்துகள், வைதிக சமயக் கருத்துகளைப் போல, தமிழில் பரவியுள்ளதனை அறிய முடியும்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:03:03(இந்திய நேரம்)