தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தூது இலக்கியம்

    • பாடம் - 2

      C01232  தூது இலக்கியம்

      இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

      சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான தூது இலக்கியத்தின் இலக்கணம், தோற்றம் ஆகியவற்றை விளக்குகிறது. தூது இலக்கியக் கூறுகள் தொல்காப்பியத்திலும் பிற இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளதைக் குறிப்பிடுகிறது. தூது நூல்கள் பல தோன்றியுள்ளதைக் குறிப்பிட்டு அழகர் கிள்ளை விடு தூதைப் பற்றி விரிவாகப் பேசுகிறது. அழகர் கிள்ளை விடு தூதின் அமைப்பு, தலைவனாகிய திருமாலின் பெருமை, தலைவனைக் கண்ட தலைவியின் நிலை, தூது செல்லும் கிளியின் பெருமை, சில புராணக் கதைகள் ஆகிய அனைத்தையும் விரிவாக விளக்குகிறது.


      இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

      • தூது இலக்கிய வகையின் இலக்கணத்தை அடையாளங் காணலாம்.

      • தூது இலக்கிய வகையின் அமைப்பை விளக்கலாம். தூது இலக்கிய வகையின் பாடுபொருள்களைத் தொகுத்துக் கொள்ளலாம்.

      • ஒருவரைப் புகழ்வதற்கு ஓர் இலக்கிய வகை எவ்வாறு பயன்படுகிறது என்று சுட்டிக் காட்டலாம்.

      • தூது இலக்கியத்தைப் படிப்பதால் ஏற்படும் பயன்களைத் தொகுத்துக் கொள்ளலாம்

      • இவ்வகை இலக்கியம் அகத்துறையில் வருவதை இந்தப்பாடத்தில் இனங்காணலாம்

      பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:24:39(இந்திய நேரம்)