தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

4. கலம்பக இலக்கியம்

    • பாடம் -4

      C01234  கலம்பக இலக்கியம்

      இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

      பொதுவாகக் கலம்பக இலக்கியத்தின் தோற்றம், பெயர்க் காரணம் கூறப்படுகிறது. இந்தப் பாடத்தில் நந்திக் கலம்பகம் விரிவாகப் பேசப்படுகிறது. நந்திக் கலம்பகத்தின் உறுப்புகளாகிய புயம், ஊசல், மறம் போன்ற பல்வேறு உறுப்புகள் பற்றிய விளக்கமும் இடம் பெறுகின்றன. நந்திக் கலம்பகம் பற்றிய மரபுவழி வரலாறும் பாடப்பட்ட முறையும் விளக்கம் பெறுகின்றன.


      இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?


      • கலம்பக இலக்கியத்தின் பெயர்க் காரணத்தைச் சுட்டிக்காட்டலாம்.

      • கலம்பக இலக்கியத்தின் தோற்றத்திற்கான மூலக்கூறுகள் தொல்காப்பியத்தில் இருப்பதைத் தொகுத்துக் கொள்ளலாம்.

      • கலம்பக இலக்கிய வகையின் உறுப்புகளை அடையாளங் காணலாம்.

      • நந்திக் கலம்பகம் என்ற நூலில் இடம் பெறும் கலம்பக உறுப்புகளைச் சுட்டிக்காட்டலாம்.

      • நந்திவர்ம பல்லவன் பற்றிய செய்திகளைத் தொகுத்துக் கொள்ளலாம்.

      • கலம்பகத்தில் இடம் பெற்ற பல்வேறு சுவைகளை இனங்காணலாம்.

      • நந்திக்கலம்பகம் மூலம் அறியலாகும் பண்டைத் தமிழர் பழக்க வழக்கங்களைப் பகுத்துத் தொகுத்துக் கொள்ளலாம்.

      பாட அமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 02:27:16(இந்திய நேரம்)