தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தொகுப்புரை

  • 5.7 தொகுப்புரை

    நண்பர்களே இதுவரையும் சதக இலக்கியம் பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டீர்கள் அல்லவா? இனி இதுவரை அறிந்த செய்திகளை மீளவும் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். இதுவரை என்னென்ன செய்திகளைத் தெரிந்து கொண்டோம்?

    சதகம் என்றால் என்ன என்பது பற்றித் தெரிந்து கொண்டோம்.

    சதக இலக்கண வரையறையையும் வகைகளையும் அறிந்து கொண்டோம்.

    சதக இலக்கியங்களின் பொதுவான நோக்கங்கள் பற்றிய செய்திகளை அறிந்து கொண்டோம்.

    பழமொழி விளக்கம் என்னும் தண்டலையார் சதகம் என்னும் நூல் பற்றிச் சிறப்பு நிலையில் செய்திகளை அறிந்து கொண்டோம்.

    தண்டலையார் சதக ஆசிரியர் வரலாறு, நூல் அமைப்பு ஆகியன பற்றித் தெரிந்து கொண்டோம்.

    தண்டலையார் சதகம் விவரிக்கும் இல்லறநெறி, உயர்ந்த பண்புகள், தீய பண்புகள், அரசியல் நெறி முதலிய செய்திகளை அறிந்து கொண்டோம்.

    1.

    தண்டலையார் சதகம் - நூலாசிரியர் பெயரைக் குறிப்பிடுக.

    2.

    தண்டலையார் சதகத்தின் முழுப்பெயரைக் குறிப்பிடுக.

    3.

    தண்டலையார் சதகத்தின் பாடுபொருள் வகையைக் குறிப்பிடுக.

    4.

    இல்லற நெறி குறித்துத் தண்டலையார் சதகம் என்ன கூறுகிறது?

    5.

    உயர்ந்த பண்புகள், தீய பண்புகள் - இவற்றைப் பட்டியல் இடுக.

    6.

    கொடுங்கோன்மை பற்றிச் சதகம் குறிப்பிடுவதை விளக்குக.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 09-08-2017 13:30:57(இந்திய நேரம்)