தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses- - உயிர் ஒலிகள்

  • பாடம் - 1

    D04141 உயிர் ஒலிகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

     

        இப்பாடம் பேச்சு ஒலிகளின் பிறப்புப் பற்றி விளக்குகிறது.     பழந்தமிழ்     இலக்கண நூலாகிய தொல்காப்பியமும், அதற்குப் பின்னர் தோன்றிய நன்னூல் போன்ற இலக்கண நூல்களும் பேச்சு ஒலிகளைப் பற்றியும், அவை எவ்வாறு எங்கெங்குப் பிறக்கின்றன என்பதைப் பற்றியும் கூறும் கருத்துகளை விளக்குகிறது.

         உயிர் ஒலிகள் தோன்றி வளர்ந்த வரலாற்றைச் சான்றுகளுடன் விளக்கிக் காட்டுகிறது.

         தற்காலத்தில் மொழியியலார் உயிர்ஒலிகளை எவ்வாறு எல்லாம்     பாகுபடுத்திப் பார்க்கின்றனர் என்பதை விளக்குகிறது. உயிரொலிகளின் பிறப்புப் பற்றி மொழியியலார் கூறும்     கருத்துகளை     விளக்குகிறது. பிறப்புமுறை அடிப்படையில் உயிர் ஒலிகளை மொழியியலார் பலவாறு பாகுபடுத்திக் காட்டுவதை விவரிக்கிறது.

        

         இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • தொல்காப்பியர், நன்னூலார் ஆகியோரோடு தற்கால மொழியியலார் எவ்வாறு ஒத்துச் செல்கின்றனர் என்பது பற்றி அறிந்து கொள்ளலாம்.

    • தமிழ் மொழியில் மூன்று அடிப்படையான உயிர் ஒலிகள் எவ்வாறு ஐந்தாகி, பின்னர்ப் பத்தாக மாறின என்பதைப் பற்றி அறியலாம்.

    • உயிர் ஒலிகளில் நெடிய ஒலிகளைக் குறிக்க மொழியியலார் கையாளும் குறியீடு பற்றியும் அதன் சிறப்புப் பற்றியும் அறியலாம்.

    • ஒலிகளின் பிறப்புப் பற்றித் தொல்காப்பியர் குறிப்பிடும் இலக்கணத்தை     மொழியியல் கண்ணோட்டத்தில் விளங்கிக் கொள்ளலாம்.

    • உயிர்     ஒலிகளை     மொழியியலார் எவ்வாறு பாகுபடுத்துகின்றனர்     என்பதை     அறியலாம்.

    • உயிர் ஒலிகள் ஒவ்வொன்றன் பிறப்பு முறையை விளக்கமாக அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:29:36(இந்திய நேரம்)