தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- உடம்படுமெய் ஒலிகள்

  • பாடம் - 4

    D04144 உடம்படுமெய் ஒலிகள்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

         உடம்படுமெய் ஒலிகள் என்றால் என்ன என்பதையும், அவை யாவை என்பதையும், புணர்ச்சியில் அவற்றின் பங்கு யாது என்பதையும் விளக்குகிறது. புணர்ச்சியில் உடம்படுமெய் வரும்     சூழலைக்     குறிப்பிட்டு     விளக்குகிறது. உடம்படுமெய் ஒலிகளின் வருகை சங்க     காலத்திலும், இடைக்காலத்திலும்     எவ்வாறு     இருந்தது என்பதையும், தற்காலத்தில் எவ்வாறு இருந்து வருகிறது     என்பதையும் விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • உடம்படுமெய் ஒலிகள் பற்றிய விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
    • உடம்படுமெய் ஒலிகள் யாவை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
    • புணர்ச்சியில் உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழலை அறிந்து கொள்ளலாம்.
    • உடம்படுமெய் ஒலிகள் பற்றித் தொல்காப்பியம் குறிப்பிடும் கருத்துகளைத் தெரிந்துகொள்ளலாம்.
    • தொல்காப்பியம் தோன்றிய காலத்தில் உடம்படுமெய் ஒலிகளின் வருகை விருப்பநிலையில் இருந்ததை அறிந்து கொள்ளலாம்.
    • சங்க இலக்கியங்களில் உடம்படுமெய் ஒலிகள் வரும் சூழலில் ஊசலாட்ட நிலை இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
    • இடைக்காலத்தில் தோன்றிய நன்னூல், உடம்படுமெய் ஒலிகளுக்கான விதிகளை வரையறுத்திருப்பதை அறிந்து கொள்ளலாம்.
    • தற்காலத்தில் உடம்படுமெய் ஒலிகள் புணர்ச்சியில் வழங்கும் முறை பற்றி விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.
புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:34:15(இந்திய நேரம்)