தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

TVU Courses-- ஒலிமாற்றம்

  • பாடம் - 5

    D04145 ஒலி மாற்றம்

    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

         இந்தப் பாடம் தமிழ் மொழியில் ஏற்பட்ட ஒலி மாற்றங்களைப் பற்றி விளக்குகிறது. ஒரு மொழியில் எவ்வாறான சூழலில் ஒலி மாற்றம் ஏற்படுகிறது என்பது பற்றியும், அதோடு கடன்பேறு காரணமாகத் தமிழில் பெரிய அளவிற்கு ஒலி மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பது பற்றியும் விளக்குகிறது. மேலும் தமிழில் உள்ள பல்வேறு வகையான ஒலி மாற்றங்களைக் குறிப்பிட்டு விளக்குகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

    • சங்க காலம் முதல் தற்காலம் வரையிலான தமிழ் மொழியில் எவ்வாறு ஒலி மாற்றம் நிகழ்ந்தது என்பதையும், எம்மாதிரியான ஒலி மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் மொழியியல் அடிப்படையில் விளங்கிக் கொள்ளலாம்.

    • கடன்பேறு காரணமாக ஒலி மாற்றம் ஏற்பட்டதால், தமிழில் புதிய ஒலியன்கள் சில வந்தமைமையை அறியலாம்.

    • பேச்சுத் தமிழுக்கும் இலக்கியத் தமிழுக்கும் உள்ள வேறுபாடு பற்றி அறியலாம்.

    • இன ஒலி மாற்றம், இருவேறு வகையான ஒலி மாற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி அறியலாம்.

    • பிளவும், இணைவும் பற்றி அறியலாம்.

    • தமிழில் உள்ள ஒலி மாற்றங்களை மொழியியலார் பல்வேறு வகைப்படுத்தி விளக்கிக் காட்டுவதை அறிந்து கொள்ளலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 06:35:46(இந்திய நேரம்)