தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

வேளாண்மையும் வணிகமும்

  • பாடம் - 6
    C03146  வேளாண்மையும் வணிகமும்
    இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    நீர்நிலைகள் ஏற்படுத்திப் பாசனம் செய்து நிலத்தைப் பயன்படுத்திய முறைகள், அரசர்கள் நீர்நிலைகள் பலவற்றை உருவாக்கியது பற்றிய செய்தியைக் கூறுகிறது. நிலத்தை அளந்து தரம் பிரித்து வரி வாங்கியது, வரிக்குறைப்பு செய்தது ஆகியவை பற்றிக் கூறுகிறது. மேலும் நன்செய் - புன்செய்ப் பயிர்கள், நிலம் திருத்துதல், நீர்நிலை காத்தல் போன்றவற்றையும் தமிழக வணிகக் குழுக்கள், வணிக முறைகள், விற்பனை முறை, வணிகச் சந்தைகள், வணிகர் பணிகள் ஆகியவற்றையும் பற்றி இப்பாடம் சொல்லுகிறது.

    இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
    • நாட்டில் நீர்நிலைகளை ஏற்படுத்துவதினால் ஏற்படும் நன்மைகளை அறிந்து கொள்ளலாம்.

    • ஆட்சியின் பயன் வேளாண்மையைப் பெருக்குவது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    • நிலத்தின் தரத்திற்கு ஏற்ப வரி வாங்குதல் வேண்டும், வணிகமே நாட்டின் அடிப்படை என்பவை ஒரு நல்ல ஆட்சிக்கு உரிய வழிமுறைகள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

    பாடஅமைப்பு

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 04:08:50(இந்திய நேரம்)